Tuesday 1 March, 2011

சிறந்த தமிழ் கவிதைகள்











முன்னோர்களின் நம்பிக்கைகள்

வணக்கம் நண்பர்களே : நம்பிக்கை என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட ஒரு விருப்பம் ஆகும் அவை ஒவ்வொரு செயலிலும் அமையும் காரணம் அவர்கள் எண்ணிய செயல்கள் வெற்றி தோல்வி போன்றவற்றின் அடிப்படையில் அமைவதால் அவர்கள் நம் முன்னோர்கள் கூறிச் சென்ற சில நம்பிக்கை முறைகளைப் பின்பற்றி வருவதே காரணம் எனலாம். அவை அவர்களின் அன்றாட செயல் நல்லகாரியம் பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையில் கூட அமையலாம். அவ்வாறு அவர்கள் பின்பற்றும் சில நம்பிக்கை முறைகளில் சிலவற்றைக் காண்போம் : திருமணம் பற்றிய நம்பிக்கைகள்: திருமணத்திற்குப் பின் மணப்பெண்ணை வெள்ளியன்று கணவன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது, திருமணம் பற்றிய கனவு நல்லதன்று, ஆடி மாதத்தில் பெண் பார்த்தல் நல்லதல்ல, திருமணமான மணமக்களை மஞ்சள் கலந்த அரிசியால் வாழ்த்த வேண்டும். புதுமணத் தம்பதிகள் புதுவீட்டில் குடியேறக் கூடாது, இவை திருமணம் பற்றிய நம்பிக்கைகள் வேளாண்மை பற்றிய நம்பிக்கைகள்: வியாழன் நாற்று நடுவதும் வெள்ளியன்று அறுப்பதும் நல்லது, திங்கள் வெள்ளி நெல் அவிக்கக் கூடாது , சந்திரனில் பிறை வடகோடு உயர்ந்திருந்தால் வரப்பெல்லாம் நெல் என நம்புகின்றனர், மழை பற்றிய நம்பிக்கைகள் : வடக்கே தெற்கே மின்னல் தோன்றினால் மழை வரும் என்பர், ஆடு கூடிகூடி அலைந்தால் மழை வரும், கறுப்பு முட்டைத் தூக்கிச் சென்றால் மழை வரும், தவளை கத்தினால் நரு ஊருக்குள் வந்தால் மழை வரும், விலங்கு பறவை பற்றிய நம்பிக்கைகள்: கருடன் வட்டமிடல் நல்லது இரண்டு ஆந்தைகளை ஒன்றாகக் காண்பது நல்லது, எருமை மாடு சனிக்கிழமை கன்று ஈனக்கூடாது, எண் பற்றிய நம்பிக்கைகள்: மூன்று நல்ல எண்ணாகக் கருதப்படு கின்றது, ஒற்றை எண்கள் நன்மை பயக்கும், நான்காவது பெண் நடைகல்லைப் பெயர்க்கும், ஆறாவது ஆண்மகன் ஆனைகட்டி வாழ்வான், ஆறாவது பெண் பிறந்தால் குடும்பம் சீரழியும், கிழமை பற்றிய நம்பிக்கைகள்: செவ்வாய் முடிவெட்டல் வறுமை தரும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, புதன்கிழமை பணம் கிடைப்பது நல்லது, செவ்வாய் வெறுவாய், வெள்ளி ஆண் பிறந்தால் கொள்ளிக்கு ஆகாது, இவ்வாறு பல்வேறு வகையான நம்பிக்கைகளை நம் முன்னோர் கூறியுள்ளனர் இவை சிலருக்குப் பொருந்தியும் வரலாம் இவ்வாறு வருபவேயே உண்மை என்று சிலர் நம்புவர் நம்பாமலும் போகலாம்.