Saturday 30 April, 2011

பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய குறிப்புகள்

பாவேந்தர் பாரதிதாசன் : பிறந்த தேதி , 29.4.1891 பிறந்த ஊர், புதுச்சேரி தந்தையார் பெயர் : கனக சபை முதலியார் இவர் முது பெரும்புலவர் பு. அ. பெரிய சாமியிடம் தமிழ்ப் பயின்றார்., பின் புதுவை அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் , இவர் தம் இயற்பெயர் சுப்புரத்தினம் , இவர் பின்பு ஒரு நாள் வேலுநாயகர் வீட்டுத் திருமணத்தில் பாரதியைச் சந்தித்தார் , மேலும் இவர் தம் பாடலான (எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா) என்ற பாடலைக் கேட்டு மகிழ்ந்த பாரதியார் அக்கவிதையைத் தாமே ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின், கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது, எனச் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பினார் , மேலும் பாரதி மேலுள்ள ஈடுபாட்டால் தம் பெயரைப் <பாரதிதாசன்> என மாற்றிக் கொண்டார், தொடக்கத்தில் முருக வழிபாடு கொண்டிருந்த பாரதிதாசன் பின் சீர்திருத்தவாதியாய்ப், பகுத்திறிவாதியாய் , மாறினார் , பின் அவர்தம் பாடல்களில் சீர்திருத்த வேட்கையும், தமிழுணர்வும் , பரவலாகக் காணப்படும். <நாடும் மொழியும் நமதிரு கண்கள்> என்பது போல் நாட்டுப்பற்று மிக்குடைய <பாரதியையும் பாரதிதாசனையும் இக்காலத் தமிழின் இருகண்கள்> எனலாம் இவர் இயற்றியவை : பாண்டியன் பரிசு, எதிர் பாராத முத்தம், சேரதாண்டவம் , அழகின் சிரிப்பு , குடும்ப விளக்கு , குறிஞ்சித் திட்டு , கண்ணகி புரட்சிக் ,காப்பியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள் , கழைக் கூத்தியின் காதல் , இளைஞர் இலக்கியம், செளமியன், இசையமுது இரண்டு தொகுதிகள் , நல்ல தீர்ப்பு , தமிழியக்கம், இருண்ட வீடு , திருக்குறள் உரை, என காலத்தால் அழியாத பேரிலக்கியம் படைத்த சகாப்தம் ஆவார் . இவர் தம் பாடல் வகை : அகவல் எண்சீர் , விருத்தம், அறுசீர் விருத்தம் , சிந்து , கலிவெண்பா, நொண்டிச் சிந்து , முதலியவை ஆகும் . இவர் தம் பாடுபொருள்: தமிழ்மொழி , இயற்கை, சீர்திருத்தம் , இல்லறமாண்பு, பொதுவுடைமை, சமத்துவம் , முதலியன ஆகும் . சிறந்த வரிகளில் சில: (தமிழுக்கும் அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்) தமிழ்பற்று பற்றியது (கூடத்திலே மனப்பாடத்திலே விழி கூடிக்கிடக்கும் ஆணழகை ஒடைக் குளிர்மலர்ப் பார்வையினால் அவள் உண்ணத் தலைப்படும் வேளையிலே ) (ஆடை திருத்தி நின்றாளவள் இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்) பெண் எழுச்சி பற்றியது (பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே) என்று எழுச்சி மிக்க பாடல் வரிகளை இயற்றியும் தமிழ் பணி செய்து வாழ்ந்து வந்த இலக்கியத் திலகம் , தமிழ்ச் சுடர் விளக்கு, 21.4.1964 இல் அனைந்தது , இன்று இந்த தமிழ்ச்சுடர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவர் தம் தமிழ்ப்பணி மற்றும் உணர்ச்சி மிக்க பாடல் வரிகள் என்றும் அழிக்க முடியாதவை , இத்தகைய சிறப்புடைய பாவேந்தரை என்றும் மறவாமல் போற்றுவோமாக !