Saturday 22 January, 2011

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

1. காந்தள் மலர்

2. ஆம்பல் மலர்

3. அனிச்சம் பூ

4. குவளை மலர்

5. குறிஞ்சிப் பூ

6. வெட்சிப் பூ

7. செங்கோடுவேரி மலர்

8. தேமாம் பூ

9. மணிச்சிகை(செம்மணிப்பூ)

10. உந்தூழ்(மூங்கில் பூ)

11. கூவிளம் பூ

12. எறுழம்பூ

13. சுள்ளி(மராமரப்பூ)

14. கூவிரம் பூ

15. வடவனம் பூ

16. வாகைப் பூ

17. குடசம்(வெட்பாலை)

18. எருவை(கோரைப்பூ)

19. செருவிளை(வெண்காக்கணம்)

20. கருவிளம் பூ

21. பயினிப் பூ

22. வானிப் பூ

23. குரவம் பூ

24. பசும்பிடி(பச்சிலைப்பூ)

25. வகுளம்(மகிழம்பூ)

26. காயா மலர்

27. ஆவிரைப் பூ

28. வேரல்(சிறுமூங்கில்பூ)

29. சூரல் மலர்

30. சிறுபூளைப் பூ

31. குறுநறுங்கண்ணி மலர்

32. குருகிலை(முருக்கிலை)

33. மருதம் பூ

34. கோங்கம் பூ

35. போங்கம் பூ

36. திலகம் பூ

37. பாதிரி மலர்

38. செருந்தி மலர்

39. அதிரல் பூ

40. சண்பகம் மலர்

41. கரந்தை மலர்

42. குளவி(காட்டு மல்லி)

43. மாம்பூ

44. தில்லைப்பூ

45. பாலைப்பூ

46. முல்லைப்பூ

47. கஞ்சங்குல்லை

48. பிடவம் பூ

49. செங்கருங்காலி மலர்

50. வாழைப் பூ

51. வள்ளிப் பூ

52. நெய்தல் மலர்

53. தாழைப் பூ

54. தளவம்(செம்முல்லைப் பூ)

55. தாமரை மலர்

56. ஞாழல் மலர்

57. மௌவல் பூ

58. கொகுடிப் பூ

59. சேடல்(பவளமல்லி பூ)

60. செம்மல்(சாதிப் பூ)

61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)

62. கோடல்(வெண்காந்தள் மலர்)

63. கைதை(தாழம் பூ)

64. வழைப் பூ(சுரபுன்னை)

65. காஞ்சிப் பூ

66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)

67. பாங்கர் பூ

68. மரவம் பூ

69. தணக்கம் பூ

70. ஈங்கைப் பூ

71. இலவம் பூ

72. கொன்றைப் பூ

73. அடுப்பம் பூ

74. ஆத்திப் பூ

75. அவரைப் பூ

76. பகன்றைப் பூ

77. பலாசம் பூ

78. பிண்டி(அசோகம்பூ)

79. வஞ்சிப் பூ

80. பித்திகம்(பிச்சிப் பூ)

81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)

82. தும்பைப் பூ

83. துழாய்ப் பூ

84. தோன்றிப் பூ

85. நந்திப் பூ

86. நறவம்(நறைக் கொடிப்பூ)

87. புன்னாகம் பூ

88. பாரம்(பருத்திப்பூ)

89. பீரம்(பீர்கம்பூ)

90. குருக்கத்திப் பூ

91. ஆரம்(சந்தனப்பூ)

92. காழ்வைப் பூ

93. புன்னைப் பூ

94. நரந்தம்(நாரத்தம்பூ)

95. நாகப்பூ

96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)

97. குருந்தம் பூ

98. வேங்கைப் பூ

99. புழகுப் பூ

Sunday 16 January, 2011

இந்த வாரத் தமிழன்பர்:

இந்த வாரத்தமிழன்பர் : உ.வே.சாமி நாதையர் பிறந்த ஆண்டு 1855 ஊர், உத்தமதானபுரம் தந்தை ,வேங்கட சுப்பையர், <தமிழ்த்தாத்தா> என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் உ வே சாமிநாதையர் இவர் காணக் கிடைக்காத அரிய பல தமிழ் நூல்களையும் பல்வேறு நூற்றாண்டிற்கு முற்பட்ட அரிய பல தமிழ் நூல்களை சேகரித்துத் திரட்டி அவற்றினை அச்சிலேற்றி அழியாமல் பாதுகாத்துத் தமிழ் பணி செய்தவர் மேலும் <மகாவித்துவான்> மீனாட்சி சுந்தரத்தின் மனம் கவர்ந்த மாணவர் மாநிலக் கல்லூரிப் பேராசிரயராகப் பணியாற்றிய இவர் என் சரித்திரம் என்னும் தமது வாழ்க்கை வரலாறு கூறும் நூலையும் இயற்றியுள்ளார் பிற நூல்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும் கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, போன்ற உரைநடை நூல்களை இயற்றியுள்ளார் இவருக்கு ஆங்கில அரசு <மகா மகோபாத்தியாய> என்னும் பட்டம் வழங்கியது இவ்வாறு பல்வேறு தமிழ் தொண்டாற்றிய இவர் 1942 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார் இருப்பினும் அவர் மறைந்தாலும் அவர் தம் தமிழ் பணிகள் என்றுமே காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை ஆகும்

Friday 7 January, 2011

கனவுகளும் அவற்றிற்கான நம்பிக்கைகளும்

இம்மானிட உலகில் உறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே ஆனால் அவ்வுறக்கம் வரும் பொழுது மனிதன் உறக்கத்தில் சில நிகழ்வுகளைப் பற்றி அவர் தம் மனக்கண் முன்னே காண முடிகின்றது அவையே கனவு அவை நல்லவை, தீயவை, என்ற வகையில் அமைகின்றன இருப்பினும் அத்தகைய உளவியல் கூறுகளை ஒரு சிலர் ஏற்கின்றனர் மற்றொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர் காரணம் அக்கனவு ஒரு சிலர் வாழ்வில் அவர்கள் கண்டது போல் பலிக்கின்றன, சிலருக்கு பலிக்காமலும் போகின்றன இருப்பினும் சிலர் கனவுகள் காண்பதே தவறு என்றும் குறிப்பிடுகின்றனர் இத்தகைய வாதங்களுக்கு நடுவில் நம் முன்னோர்கள் பலர் கனவுகளும் அவற்றிற்கு ஏற்ற சில நம்பிக்கை முறைகளையும் கூறி வருகின்றனர் அவை பின்வருமாறு : 1 அதிகாலை கனவு பலிக்குமென நம்புகின்றனர். 2.கனவில் சாவைக் காண்பது நல்லது என்பர். 3.கனவில் திருமணத்தைக் காண்பது நல்லதல்ல என்பர். 4.கனவில் மலத்தைத் தொட்டதாகக் கண்டால் செல்வம் அதிகரிக்கும் 5.கனவில் ஆகாய விமானத்தைக் கண்டால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் குறிக்கும். 6.கனவில் இரும்பைக் கண்டால் துன்பம் பல நேரும். 7.வெள்ளி உலோகத்தைக் கனவில் கண்டால் வாழ்க்கையில் வெற்றியும் பரத்தையர் உறவும் ஏற்படும். 8.கனவில் ஆப்பிள் பழங்களைக் கண்டால் அதிர்ஷ்டம் ஆகும். 9.உப்பைக் கண்டாலும் அதிரஷ்டம் ஆகும், மேலும் ஆமையைக் காண்பதும் அதிர்ஷ்டம் ஆகும் . 10.கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சைமரம், விறகு, முதிலியவற்றைக் காண்பது நல்லதல்ல. 11.கனவில் எழுதிக் கொண்டிருப்பதாகக் கண்டால் நல்ல செய்திகள் வரும், மேலும் கனவில் சந்திரனைக் கண்டால் காதலில் வெற்றி ஏற்படும். 12.கனவில் ஏர் உழுவதாகக் கண்டால் எடுத்த காரியம் தாமதமாக வெற்றியடையும். 13.வானத்தில் கழுகு வட்டமிடுவதாகக் கனவு கண்டால் தீமை வரும், மேலும் காகத்தைக் கனவில் கண்டால் மரணச் செய்தி வரும். 14.கிணற்றில் நீந்துவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 15.கனவில் தாமே இறப்பதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும், மேலும் சிறைச் சாலையில் இருப்பதாகக் கனவு கண்டால் பேரும் புகழும் உண்டாகும். 16.பொற்சங்கிலி அணிவதுபோலக் கனவு கண்டால் நல்ல அறிகுறியாகும், மேலும் மணியோசைக் கேட்பதாகக் கனவு கண்டால் திருமணம் நடைபெறும். 17.சீட்டு ஆடுவதாகக் கனவில் கண்டால் மனக்கவலை ஏற்படும், மேலும் மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் உறவு வைப்பதாகக் கனவு கண்டால் ஆபத்து ஏற்படும். 18.சூரிய கிரகணம் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் தீமை ஏற்படும், ஆனால் சூரியன் உதயமாவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 19.தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் வேலைவாய்ப்பில் உயர்வு ஏற்படும்... இவ்வாறு மனிதர்களின் கனவுகளுக்கு ஏற்ற நம்பிக்கை முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர் இவை வாழ்வியலுடன் ஒப்பிடும் பொழுது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கன்றது....

Wednesday 5 January, 2011

வாரம் ஒரு தமிழன்பர்:

வாரம் ஒரு தமிழன்பர்: தாயுமானவர் : இவரின் கால கட்டம் கி.பி 1706_1744 வரை ஆகும் ஊர் திருமறைக்காடு : பெற்றோர் பெயர்: கேடிலியப்ப பிள்ளை கஜவல்லி அம்மையார் இவர் "திரசிரபுரம் விசயரங்க சொக்க நாதரிடம் கணக்கராய்ப் பணியாற்றினார்" பின் 1736 இல் துறவு பூண்டார் சித்தர் சமரச சன்மார்க்க நெறியினர் மேலும் இவர் தம் பாடல்கள் " தாயுமானவர் சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு " என்பர் இதனைத் " தமிழ் மொழியின் உபநிடதம்" என்பர். இவரைத் "தமிழ்ச்சமயக் கவிதையின் தூண்" என்பர் இவர் பாடல் மூலம் எளிய பாடல் பாட வள்ளலார்க்கும் பாரதிக்கும் வழிகாட்டினார் இவர் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன. இத்தகைய புகழ் பெற்ற தமிழன்பர் இப்பூமியில் வாழ்ந்த ஆண்டுகளோ 48 மட்டுமே ஆனால் செய்த தமிழ் பணியோ என்றுமே காலத்தால் அழியாதவை !