Monday, 2 May 2011
உலகத் தமிழ் மாநாடு பற்றிய குறுந்தகவல்கள்:
உலகத் தமிழ் மாநாடு என்பது பல்வேறு நாட்டில் உள்ள உலகத் தமிழர்களையும் , அறிஞர்களையும் , ஒன்றினைத்து தமிழ் மொழி வளர்ச்சிக்கான வழிமுறைகள் பற்றியும், தமிழாய்வு பற்றியும் ,விவாதித்தல் கட்டுரைகள், சிறப்பு ஆய்வேடுகள், வெளியிடுதல், ஆகும். இவற்றிற்கு பெரிதும் துணை நின்றவர் (தனிநாயகம் அடிகளார் ) ஆவார் . அவர் இதற்காக 1964 ஆம் ஆண்டு சிறப்பு இதழ் ஒன்றையும் வெளியிட்டார் . பின் முதல் உலகத் தமிழ் மாநாடு : 1966 ஆம் ஆண்டு நடைபெற்றது இம்மாநாடு ஏப்ரல் 17 முதல் 23 வரை நடைபெற்றது இடம் மலாயப் பல்கழைக் கழக வளாகத்தில் நடைபெற்றது . 132 பேரளார்களும் 40 பார்வையாளர்களும் 21 நாட்டின் அறிஞர்களும் கலந்து கொண்டனர் . 146 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன . இம்மாநாட்டிற்கு இராமநாதன் எஸ். அரசரத்தினம் எஸ். சிங்காரவேலு தனிநாயகம் அடிகளார் ஆகியோர் முன்னின்றனர் தமிழகம் முதலமைச்சர் பக்தவச்சலம் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார் . இரண்டாம் உலகத் தமிழ்நாடு : 1968 ஆம் ஆண்டு சனவரி 3 முதல் 10 வரை நடைபெற்றது. இம்மாநாட்டினை அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா முன்னின்று நடத்தினார் . சென்னை மாநாட்டில் 40 நாடுகளிலிருந்து 430 பேர் கலந்து கொண்டனர். மேலும் ஏ.சுப்பையா மாநாட்டின் அமைப்பாளராகவும் வி எஸ் தியாகராசன் . பொதுச்செயலாளராகவும் பணியாற்றினர் . மாநாட்டின் சிறப்பாக கையேடு . நினைவு மலர் கோலாலம்பூர் மாநாட்டுத் தொகுப்பு நூல் சென்னை மாநாட்டில் வெளியிடப்பட்டது. மூன்றாம் உலகத் தமிழ் நாடு : பாரீசில் 1970 ஆம் ஆண்டு சனவரி 15 முதல் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு எவ்வித ஆரவாரமும் இல்லாமல் நடைபெற்றது . பேராளர்கள் மற்றும் பார்வையாளர்களுமாக 26 நாடுகளிலிருந்து 180 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்வர் மு.கருணாநிதி கே.ஏ.மதியழகன் மற்றும் பேராசிரியர் ஜுன் பிலியோ சயாரிசிலே ஆகியோர் முன்னின்று நடத்தினர் . நான்காம் உலகத் தமிழ் நாடு : முதல் மூன்று மாநாடுகள் ஆராய்ச்சி மன்றத்தின் கொள்கை படியே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றது. பின் பல்வேறு காரணங்களால் இம்மாநாடு நான்கு ஆண்டிற்கு பிறகு நடைபெற்றது. 1974 சனவரி 3 முதல் 9 வரை யாழ்ப்பாணத்தில நடைபெற்றது. வெளிநாட்டு உதவியே இல்லாமல் நடந்த மாநாடு ஆகும். 106 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் வழங்கப் பெற்றன. மேலும் இம்மாநாட்டில் நடைபெற்ற சிறிய கலவரத்தால் 14 தமிழர்கள் கொல்லப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு : 1981 இல் மதுரையில் நவம்பர் 15 முதல் 19 வரை நடைபெற்றது . மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கும் பந்தயத்திடலில் பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும், நடைபெற்றன. வெளிநாட்டிலிருந்து 463 அறிஞர்களும் , இந்தியாவிலிருந்து 291 அறிஞர்களும், பேராளர்களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டில் 232 கட்டுரைகள் படிக்கப்பட்டன. இவை மூவாயிரம் பக்கங்களைக் கொண்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. மாநாட்டில் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் திரு.வி கலியாணசுந்தரனார், வீரமாமுனிவர் , தத்துவபோதகர் , உ.வே.சா. கவிமணி, தனிநாயகம் அடிகளார், ச. சோம சுந்தர பாரதி , பாண்டித்துரைத் தேவர், ஆறுமுக நாவலர், ஆகியோருக்கு இம்மாநாடு சார்பாக சிலைகள் நிறுவப்பட்டன. மேலும் மதுரை தமுக்கம் கலையரங்கம் முன்பு நிறுவப்பட்ட தமிழ்த்தாயின் திருவுருவச் சிலையினை அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார் . ஆறாம் உலகத் தமிழ் நாடு : 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 முதல் 19 வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. தலைசிறந்த தமிழறிஞர்களின் 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஆர்.ஈ.ஆஷர் மலேசியப் பிரதமர் மஹாதீர் முகம்மது ஆகியோர் இம்மாநாட்டிற்கு முன்னிலை வகித்தனர். ஏழாம் உலகத் தமிழ் மாநாடு : 1989 ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டில் டிசம்பர் 1 முதல் 8 வரை நடைபெற்றது. தமிழ் பண்பாட்டுக் கலைகளான கும்மி கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன . பிரெஞ்சு ஆப்பிரிக்கா சீனா இந்தியா நாடு என்று பல்வேறு நாட்டின் தமிழ் அறிஞர்களும் வந்திருந்தனர். மாநாட்டினை மொரீசியஸ் நாட்டு உலகத் தமிழ் ஆராயச்சிக் கழகம் (IATR) அந்நாட்டு அரசின் உதவியினைப் பெற்று மாநாட்டினை நடத்தியது இம்மாநாட்டிற்கு முன்னின்றவர் நாராயண சாமி திருமலை செட்டி ஆவார். எட்டாம் உலகத் தமிழ் மாநாடு : 1995 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் 5 வரை நடைபெற்றது. அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது . இம்மாநாடு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் மிகுந்த பொருட் செலவுகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் பண்பாட்டு மலர், அறிவியல் மலர், மாணவர் மலர், என மூன்று மலர்கள் வெளியிடப்பட்டன. கோவை மாநாடு : செம்மொழி என்ற தகுதியைத் தமிழ் மொழி பெற்றதால் ! ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு (உலகத் தமிழ் செம்மொழி மாநாடு) என்று அறிவிக்கப்பட்டு தற்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கோவையில் ஜீன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. மாநாட்டில் 49 நாட்டிலிருந்து 1020 பிரதிநிதிகள் 55 தலைப்புகளில் பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வுக் கட்டுரை அளித்தனர், இவ்வாறு பல்வேறு காலங்களில் தமிழ் மொழிக்கும், அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், சிறப்பு செய்யும் விதமாகவும் தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் பறை சாற்றும் வண்ணமும் தமிழின் பெருமையை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இம்மாநாடு நடைபெற்றது என்பதில் ஐயமில்லை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment