Friday 7 January, 2011

கனவுகளும் அவற்றிற்கான நம்பிக்கைகளும்

இம்மானிட உலகில் உறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே ஆனால் அவ்வுறக்கம் வரும் பொழுது மனிதன் உறக்கத்தில் சில நிகழ்வுகளைப் பற்றி அவர் தம் மனக்கண் முன்னே காண முடிகின்றது அவையே கனவு அவை நல்லவை, தீயவை, என்ற வகையில் அமைகின்றன இருப்பினும் அத்தகைய உளவியல் கூறுகளை ஒரு சிலர் ஏற்கின்றனர் மற்றொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர் காரணம் அக்கனவு ஒரு சிலர் வாழ்வில் அவர்கள் கண்டது போல் பலிக்கின்றன, சிலருக்கு பலிக்காமலும் போகின்றன இருப்பினும் சிலர் கனவுகள் காண்பதே தவறு என்றும் குறிப்பிடுகின்றனர் இத்தகைய வாதங்களுக்கு நடுவில் நம் முன்னோர்கள் பலர் கனவுகளும் அவற்றிற்கு ஏற்ற சில நம்பிக்கை முறைகளையும் கூறி வருகின்றனர் அவை பின்வருமாறு : 1 அதிகாலை கனவு பலிக்குமென நம்புகின்றனர். 2.கனவில் சாவைக் காண்பது நல்லது என்பர். 3.கனவில் திருமணத்தைக் காண்பது நல்லதல்ல என்பர். 4.கனவில் மலத்தைத் தொட்டதாகக் கண்டால் செல்வம் அதிகரிக்கும் 5.கனவில் ஆகாய விமானத்தைக் கண்டால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் குறிக்கும். 6.கனவில் இரும்பைக் கண்டால் துன்பம் பல நேரும். 7.வெள்ளி உலோகத்தைக் கனவில் கண்டால் வாழ்க்கையில் வெற்றியும் பரத்தையர் உறவும் ஏற்படும். 8.கனவில் ஆப்பிள் பழங்களைக் கண்டால் அதிர்ஷ்டம் ஆகும். 9.உப்பைக் கண்டாலும் அதிரஷ்டம் ஆகும், மேலும் ஆமையைக் காண்பதும் அதிர்ஷ்டம் ஆகும் . 10.கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சைமரம், விறகு, முதிலியவற்றைக் காண்பது நல்லதல்ல. 11.கனவில் எழுதிக் கொண்டிருப்பதாகக் கண்டால் நல்ல செய்திகள் வரும், மேலும் கனவில் சந்திரனைக் கண்டால் காதலில் வெற்றி ஏற்படும். 12.கனவில் ஏர் உழுவதாகக் கண்டால் எடுத்த காரியம் தாமதமாக வெற்றியடையும். 13.வானத்தில் கழுகு வட்டமிடுவதாகக் கனவு கண்டால் தீமை வரும், மேலும் காகத்தைக் கனவில் கண்டால் மரணச் செய்தி வரும். 14.கிணற்றில் நீந்துவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 15.கனவில் தாமே இறப்பதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும், மேலும் சிறைச் சாலையில் இருப்பதாகக் கனவு கண்டால் பேரும் புகழும் உண்டாகும். 16.பொற்சங்கிலி அணிவதுபோலக் கனவு கண்டால் நல்ல அறிகுறியாகும், மேலும் மணியோசைக் கேட்பதாகக் கனவு கண்டால் திருமணம் நடைபெறும். 17.சீட்டு ஆடுவதாகக் கனவில் கண்டால் மனக்கவலை ஏற்படும், மேலும் மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் உறவு வைப்பதாகக் கனவு கண்டால் ஆபத்து ஏற்படும். 18.சூரிய கிரகணம் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் தீமை ஏற்படும், ஆனால் சூரியன் உதயமாவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 19.தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் வேலைவாய்ப்பில் உயர்வு ஏற்படும்... இவ்வாறு மனிதர்களின் கனவுகளுக்கு ஏற்ற நம்பிக்கை முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர் இவை வாழ்வியலுடன் ஒப்பிடும் பொழுது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கன்றது....

No comments:

Post a Comment