Wednesday, 5 January 2011

வாரம் ஒரு தமிழன்பர்:

வாரம் ஒரு தமிழன்பர்: தாயுமானவர் : இவரின் கால கட்டம் கி.பி 1706_1744 வரை ஆகும் ஊர் திருமறைக்காடு : பெற்றோர் பெயர்: கேடிலியப்ப பிள்ளை கஜவல்லி அம்மையார் இவர் "திரசிரபுரம் விசயரங்க சொக்க நாதரிடம் கணக்கராய்ப் பணியாற்றினார்" பின் 1736 இல் துறவு பூண்டார் சித்தர் சமரச சன்மார்க்க நெறியினர் மேலும் இவர் தம் பாடல்கள் " தாயுமானவர் சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு " என்பர் இதனைத் " தமிழ் மொழியின் உபநிடதம்" என்பர். இவரைத் "தமிழ்ச்சமயக் கவிதையின் தூண்" என்பர் இவர் பாடல் மூலம் எளிய பாடல் பாட வள்ளலார்க்கும் பாரதிக்கும் வழிகாட்டினார் இவர் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன. இத்தகைய புகழ் பெற்ற தமிழன்பர் இப்பூமியில் வாழ்ந்த ஆண்டுகளோ 48 மட்டுமே ஆனால் செய்த தமிழ் பணியோ என்றுமே காலத்தால் அழியாதவை !

Thursday, 23 December 2010

இந்த வாரப் புலவர்
ஆறுமுக நாவலர்: யாழ்ப்பாண நல்லூர். சைவ வேளாள மரபினர்" தமிழ்க் கல்லூரி பல நிறுவித் தமிழ் வளர்த்தவர். 27 ஆம் வயதில் திருவாடுதுறை ஆதீனத்தால் "நாவலர்" என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். "வசன நடை கைவந்த வல்லாளர்" என்று "பரிதிமாற் கலைஞரால்" பாராட்டப்படுபவர். குழந்தை இயேசுவை முதன் முதலில் "கர்த்தர்" என்ற சொல்லால் குறித்தவர் இவரே ஆவார். இயற்றிய படைப்புகள் : சைவ சமய உரை, திருமுருகாற்றுப்படை, திருவிளையாடற்புராண வசனம், பெரியபுராண வசனம், கந்த புராண வசனம், போன்ற பல நூல்கள் ஆகும். தமிழ் வாதம் பல செய்தவர் இதனை "வைதாலும் வழுவின்றி வைவார்" என்று சி.வை.தாமோதரம் பிள்ளை பாராட்டால் அறியலாம்....

Wednesday, 8 December 2010

கவிதை: இல்லம்

அன்று அவர் மகனுக்காக ஆசை ஆசையாய் கட்டியதோ கனவு இல்லம் ! ஆனால் இன்றோ அவர் சோகத்துடன் அமர்ந்திருப்பதோ முதியோர் இல்லம்!