Sunday, 27 February 2011

வாரம் ஒரு தமிழன்பர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிறப்புகள் :காலம் (1826 1889) தமிழ் நாவலின் 'தந்தை' என அழைக்கப்படுபவர் மேலும் இவர் புதினத்தின் முன்னோடியாகவும் உரைநடையின் தொடக்க முயற்சியாளராகவும் விளங்கியவர். ஆவார் தமிழில் தோன்றிய முதற்புதினமான பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி கதை, ஆகிய சிறப்புமிக்க இரண்டு புதினங்களை இயற்றி வெற்றியும் கண்டவர் இவரே ஆவார். இவற்றில் பிரதாப முதலியார் சரித்திரம் நீதிக்கருத்துக்களும் , நகைச்சுவைப் பகுதியும் நிறைந்தவை ஆகும் . மேலும் தானே கதை சொல்லும் பாணியில் அமைந்தவை , மேலும் சுகுண சுந்தரி என்ற புதினம் 'கற்பனை வளம்' நிறைந்தவை ஆகும். மேலும் இவர் பல்வேறு வகையான இலக்கியப் புதினம் நாவல் போன்றவற்றினை இயற்றி நாவல் உலகின் தந்தையாகத் திகழ்கின்றார் அவர் தம் பணியை நாமும் போற்றிப் புகழ்வோமாக!

Friday, 18 February 2011

உலகின் புனைப் பெயர்கள் :

உலகின் புனைப் பெயர்கள் : இவ்வுலகில் பல்வேறு வகையான நாடுகள் தத்தமக்கே உரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் அந்நாட்டின் சில சிறப்பம்சம் கருதி அவைகள் சில புனைப் பெயர்களால் குறிப்பிடப் படுகின்றன அவைகள் பற்றி இனிக் காண்போம் உலகின் கூரை : பாமீர் பீடபூமி, உலகின் சர்க்கரைக் கிண்ணம் : கீயூபா, இருண்ட கண்டம் : ஆப்பிரிக்கா , ஐரோப்பாவின் தானியக் களஞ்சியம்: ஹங்கேரி நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு : நார்வே, சூரியன் மறையா நாடு: பிரிட்டன், புனித பூமி: பாலஸ்தீனம்' ஆயிரம் ஏரிகளின் நாடு : பின்லாந்து , நைல் நதியின் நன்கொடை : எகிப்து, முடிவில்லா நகரம்: ரோம், வெள்ளை யானை நாடு : தாய்லாந்து, சீனாவின் துயரம்: ஹவாங்கோ நதி' (மஞ்சள் நதி) உலகின் தனிமைத் தீவு: டிரிஸ்டன். தங்கக் கம்பளி பூமி: ஆஸ்திரேலியா' பொன் வாயில் நகரம்: சான் பிரான்ஸிஸ் கோ, கனவுக் கோபுரங்களின் நகரம்: ஆக்ஸ்போர்டு, கருங்கல் நகரம்: அபர்டின் ஸ்காட்லாந்து, வெள்ளை நகரம்: பெல்கிரேடு, இவ்வாறு சிற்சில சிறப்புகள் கொண்டு இந்நாடுகள் புனைப் பெயருடன் வழங்கப் படுவதைக் காணலாம்

Wednesday, 9 February 2011

வாரம் ஒரு தமிழன்பர் :

பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி : " புதினத்தின் புத்துயிர் " என்று போற்றப்படும் இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் காலம் (1859 1906) வரை ஆகும் பெற்றோர் பெயர்: மகாலிங்க அய்யர், அகிலாண்டேசுவரி அம்மாள், ஆவார். இவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம், ஆகிய மூன்று மொழிகளிலும் நூல் இயற்றியவர் ஆவார். இவர் தம் காவியம் படைத்த நூல்களில் சில 1894 இல் தானவன், 1900 இல் தீனதயாளு, 1903 இல் மதிகெட்ட மனைவி, ஆகிய புதினங்கள் சிறப்புப் பெற்றவையாகும். மேலும் இவை மட்டுமின்றி இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை, மந்திரோபதேசம், ஆகிய நூல்களையும் படைத்துள்ளார் மேலும் இவர் நமது தீன தயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறிப் பெருமையுற்றார் இதற்குக் காரணம் இவருடைய புதினத்திற்கு முன் தோன்றியவை சரிதம் சரித்திரம் என முடியும் தலைப்புகள் கொண்டவை ஆகையால் தான் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தாமல் இவ்வாறு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தமையால் இவர் இவ்வாறு பெருமையுற்றார் மேலும் இவர் ஒரு மேற்கோட்பாட்டிற்குப் பின்தான் அத்தியாயம் தொடங்குவார் இருப்பினும் வடசொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார். இவரை !மர்மக் கதை முன்னோடி! எனலாம் ரெனால்டு , தாக்கரே, ஆகியோர் புதினங்களின் தாக்கம் இவர் புதினங்களில் அதிகம் காணப்படும் இவ்வாறு 49 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தாலும் இவர் தம் இலக்கியப் பணி என்றுமே என்றுமே மக்கள் மனதில் அழியாப் புகழ் என்பதில் ஐயமில்லை! நாமும் அவர் தம் இலக்கியப் பணியைப் போற்றிப் புகழ்வோமாக!

Tuesday, 8 February 2011

கவிதை : மழைத்துளி

கவிதை : 'மழைத்துளி' மேகத்தின் காதலை பூமிக்கு சொல்ல தூதாய் வந்த மழைத்துளியே நான் காதலில் தோற்று கண்ணீருடன் நின்ற பொழுது என் மீது பெய்து என் துயர் துடைத்தாய் நீ மழைத்துளி அல்ல என் மனதில் விழுந்த உயிர்த்துளி !